மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து பிப். 5-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ‘நீட் தேர்வும் – விளைவுகளும்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் 2 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் என்பதை மாற்றி தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும்.

இப்பிரச்சினை குறித்து நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் மருத்துவ இடங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 5-ல் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

முதல் கட்டமாக பிப்ரவரி 10-ல் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து முழுமையான விளக்கு அளிக்க வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கையாக அமைந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top