மூன்று அணிகள் மல்லுக்கட்டி அதிக விலைக்கு ஏலம்போன ஜெய்தேவ் உனட்கட்!

 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது.

2018 ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏலத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.12½ கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.

இன்று இரண்டாவது நாள் நடைபெற்று வரும் ஏலத்தில் இந்திய வீரர் ஜெய்தே உனட்கட் ரூ.11½ கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். அவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே ஏலம் எடுத்து உள்ளது. 2018 ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு உள்ள இந்திய வீரர் ஜெய்தேவ் உனட்கட் ஆவார்.

ஜெய்தேவ் உனட்கட்டை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான், மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சென்னை அணியில் வேகப்பந்து வீச்சளர்கள் குறைவாக உள்ளதால் உனட்கட்டை ஏலம் எடுப்பதற்கு சென்னை அணி 10.5 கோடி ரூபாய் வரை போட்டியிட்டது. அதையும் தாண்டி பஞ்சாப் 11 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதற்கு மேல் போட்டி போட சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பவில்லை. இதனால் பங்சாப் அணி 11 கோடி ரூபாய்க்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்தது.

கடும் போட்டிக்கு இடையே ராஜஸ்தான் அணி அவரை ரூ.11½ கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் அணி கர்நாடகா ஆல்-ரவுண்டர் கே கவுதமை ரூ. 6.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோர் நேற்று ரூ. 11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர், அவர்களை ஜெய்தேவ் உனட்கட் பின்னுக்கு தள்ளிஉள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top