நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது; பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபைகளின் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க அரசு கொண்டு வைத்த பண மதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டீ மக்களை கடுமையாக பாதித்தது. எனும் இந்த அபதிப்பில் இருந்து பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் நலம் கருதாமல் மத்திய அரசு செய்த இந்த செயல் பெரும் பின்னடைவை சந்தித்தது அரசு.

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெறும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top