பஸ் கட்டண உயர்வு; போக்குவரத்து கழகங்களுக்கு வந்த வருவாய் எங்கே போனது?- ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டும் தமிழக அரசு, போக்குவரத்து கழங்களுக்கு முன்பு வந்த வருவாய் எங்கே போனது என விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கலந்தகொண்டு கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதிமுக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சினையை தீர்க்கவில்லை. போக்குவரத்து கழகங்களில் தற்போது தலைவிரித்து ஆடும் ஊழல் தான் பிரச்சினைக்கு காரணம். பேருந்து டிக்கெட் அச்சிடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது.

டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு கூறுகிறது. அப்படியானால் டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் அளவில் விற்பனையானபோது அந்த லபாம் எங்கே போனது? பேருந்து கட்டண உயர்வால் மாணவர்கள், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி கவலையின்றி கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது என தமிழக அரசு கூறி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற கவுரவம் பார்க்காமல், நானே முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பேசினேன். ஆனால் அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை.

போக்குவரத்துறையை லாபம் ஈட்டும் துறையாக திமுக ஆட்சிக்காலத்தில் பார்க்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் துறையாகவே பார்த்தோம். ஆனால் அதிமுக அரசு அப்படி பார்க்கவில்லை. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் இன்றுடன் முடிவடைந்து விடப்போவதில்லை. கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடைபெறும்’’ எனக்கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top