2018 ஐ.பி.எல் : சென்னை சூப்பர் கிங்சில் இடம்பிடித்திற்கும் வீரர்கள் விவரம்

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. இதையொட்டி இதற்கு முன் 8 அணிகளில் விளையாடிய 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் இன்று காலை சரியாக பத்து மணிக்கு தொடங்கியது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் இதற்கு முன்பு இருந்தாற்போல் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்று நடைபெற்றுவரும் ஏலத்தில் இதுவரை ஐந்து வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ரவிசந்திரன் அஷ்வினை சென்னை அணி ஏலத்தில் விட்டுக்கொடுத்தாலும், ஆர்.டி.எம். முறையை பயன்படுத்து டு பிளிசிஸ், வெய்ன் பிராவோவை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், இந்திய ஆல்-ரவுண்டர் கெதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர் ஆகியோரும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். ரெய்னா, ஜடேஜா, பிராவோ, வாட்சன், கெதார் ஜாதவ் ஆகியோருடன் சேர்த்து இதுவரை சென்னை அணிக்கு ஐந்து ஆல்-ரவுண்டர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணி வீரர்கள் விவரம்:

மகேந்திர சிங் டோனி (ரூ. 15 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ. 11 கோடி), ரவிந்திர ஜடேஜா (ரு. 7 கோடி), ஹர்பஜன் சிங் (ரூ. 2 கோடி), கெதார் ஜாதவ் (ரூ. 7.80 கோடி), டு பிளிசிஸ் (ரூ. 1.60 கோடி), அம்பதி ராயுடு (ரூ. 2.20 கோடி), இம்ரான் தாஹிர் (ரூ. 1 கோடி), வெய்ன் பிராவோ (ரூ. 6.40 கோடி), ஷேன் வாட்சன் (ரு. 4 கோடி).


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top