பேருந்து கட்டண உயர்வில் நீதிமன்றம் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

 

 

அரசின் பேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது.

 

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு  எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி 19ம் தேதி நள்ளிரவில் முடிவுசெய்து ஜன. 20-ம் தேதி முதல் அரசு பஸ்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

 

இதனால் ஏழைக் கூலித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

 

தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று இக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவது போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்தக் கண்டன உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படிருந்தது.

இந்த பொது நல மனுவை முனிகிருஷ்ணன், சித்தரவேலு ஆகிய வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த பொதுநல மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தினாலும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போரட்டத்தினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவே பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

 

எனினும் பேருந்து கட்டண உயர்வை மக்களிடம் அறிவித்த தமிழக அரசு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் எந்த அளவுக்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் முறையாக தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறி பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

 

,

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top