பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவருடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் காட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, நீண்டகால சிறைவாசிகள் உட்பட எழுவரையும் 161ன் கீழ் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2016-ம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பேராறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை நாம் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top