‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதற்கு முன் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படியில், இடஒதிக்கீட்டின் கீழும் நடந்து வந்தது. இதன் காரணமாக அணைத்து சமூக மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில முடிந்தது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இதில் பெரிதும் பலன் அடைந்துவந்தனர்.

‘நீட்’ தேர்வில் கேள்வித்தாள், சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படுகிற மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கிற மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளது உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில், நடப்பு 2018-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டங்களையும் சேர்த்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பின்னடைவாக இருக்காது. அனைத்து மாநில மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு சமமாக இருக்கும். இதன்மூலம், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி இதுகுறித்து யாரும் குற்றம்சாட்ட முடியாது” என குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின

ஆனால் நாடு முழுவதும் நடப்பு 2018-ம் ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று, அந்த தேர்வை நடத்துகிற மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ‘நீட்’ தேர்வு சமமாக இருக்க வேண்டும் என்றே இந்த கோரிக்கையை முன்னிறுத்தினர், தற்போது ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று, அந்த தேர்வை நடத்துகிற மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது கல்வியின் சமநிலையை பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதற்கு மாணவர் அனிதா மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து தமிழநாடு முழுவதும் மத்திய அரசின் இந்த சமநிலை அற்ற நீட் மருத்துவ தகுதி தேர்வு முறைக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டனர். நீட் தேர்வு முறையை இரத்து செய்யக்கோரி பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு என்பது அனைத்து சமூக மாணவர்களையும், கிராபுர மாணவர்களையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top