இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்

‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்,’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவந்த “நானும் ரவுடிதான்” படம் வணிக ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றது. அந்த அளவிற்கு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. பெயரிடப்படாத இப்புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது, சிவகார்த்திகேயன் பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடிக ஒப்பந்தம் ஆகி உள்ள சிவகார்த்திகேயன், ஏற்கெனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக குரியத்தின் காரணமாக இப்படத்தில் நடிக ஒப்பு கொண்டார்.

இந்த செய்தி இப்பொது, விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top