பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார்.
இதைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின் மீது லண்டன் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. விஜய் மல்லையாவிற்கு எதிரான வழக்குகளை அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு பிரிவுகள் விசாரித்து வருகிறது.
மோசடி வழக்கில் தொடர்புடைய மல்லையா மற்றும் 18 பேரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தவறான தகவல்களை காண்பித்து மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 36 விதி பிரிவு 447, 448 ஆகியவற்றின் கீழ் நிறுவன சட்டம் 2013-ன் கீழ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையா, யுபி குழும அதிகாரிகள் குறிப்பாக தலைம நிதி அதிகாரி ஏ.கே. ரவி நெடுங்காடி, டெக்கான் ஏவியேஷன் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத், ஆம்பிட் நிறுவனத்தை சேர்ந்த அசோக் வாத்வா மற்றும் நிறுவனத்தின் முன்னணி சார்டர்ட் அக்கவுன்டென்டுகளுக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 19 நபர்களுக்கும் நிறுவன சட்ட விதிகள் 2013-ன்படி புதிதாக சிறப்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இவர்களுக்கு 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் இவர்களின் தண்டனை அளவுக்கேற்ப மூன்று மடங்கு வரை அபராதமும் விதிக்க வகையுள்ளது.
மிக அதிக அளவு தொகைக்கொண்ட மோசடி வழக்கில் ஈடுபட்டுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டே இந்த நீதிமன்றம் குற்றத்தில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்ததாக நீதிபதி தெரிவித்தார்.