25 நாட்களாக தொடர்ந்த நடந்த பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்றது. நாடு முழுவதற்கும் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் மற்றும் இந்தியா சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து வருவதும் தான் என பட்டாசு ஆலைகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

தமிழநாடு, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தான் இந்தியாவிலே மிகப் பெரிய பட்டாசு உற்பத்தி மையம். ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது மேலும் இப்பகுதியில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

போதிலும் தீபாவளி, தசரா பாண்டிகைகளை கருத்தில் கொண்டு வங்கி கடன் பெற்று பட்டாசு தயாரிப்பில் மும்முரமாக ஈடுட்டோம். ஜி.எஸ்.டி. வரி காரணமாக பட்டாசுக்கான வரி 28 சதவீதம் என அறிவிக்கப்பட்டதால் பட்டாசுக்கான மூலப்பொருட்கள் விலை 20 சதவீதம் வரை உயர்ந்தது. விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி மற்றும் தசரா பண்டிகைக்கு உற்பத்தி செய்யப்பட்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள், ஆலைகளிலேயே தேங்கி கிடக்கின்றன.

இவர்கள் தொழில் பாதிப்பு அடைந்து வாழ்வாதாரமே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.

இன்று 25-வது நாளாக போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், நேற்று சிவகாசி அருகே திருத்தங்கலில் பட்டாசு தொழிலாளர்கள் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து செய்த்தனர். இதை தொடர்ந்து இன்றும் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பட்டாசு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வந்த நிலையில், நேற்றிரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, 25 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு என்று கூறி உள்நாட்டில் உற்பத்திசெய்யும் பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமாற்றம், அதே சமயம் மத்திய அரசு சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top