ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப கவிஞர் வைரமுத்துக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்துத்துவ வெறியின் உச்சமாக கவிஞர் வைரமுத்துவை கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என நேற்று பாஜகவில் புதிதாக இணைந்த நயினார் நகேந்திரன் கொலை செய்யச்சொல்லி பொதுமக்களை தூண்டி விட்டார். அரசும் போலிசும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அதேநேரத்தில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள் 18 பேர் நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைரமுத்துவின் கருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அவரது மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆராய்ச்சி கட்டுரையில் இருந்த கருத்தையே வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். எனவே அது அவரது சொந்த கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளே இந்த பிரச்சனையை பெரிதாக்கி இருப்பதாக வைரமுத்து தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top