கோவாவில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு: மக்கள் வெளியேற்றம்

கோவா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே, வாஸ்கோ சிட்டியில் இருந்து பானஜிக்கு அமோனியா வாயு ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று சிகலிம் என்ற பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயு கசியத் தொடங்கியது.

அமோனியா வாயு பரவியதால் அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். உடனடியாக இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி அவைக்கப்பட்டது. அதிகாலையில் தூங்கி கொண்டு இருந்த மக்களை எழுப்பி விடும் பணியில் போலீஸ் மாற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். உடனடியாக அனைவரும் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சீரானது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top