சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது: சென்னையில் டோனி பேட்டி

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தடை செய்யபட்டிருந்தன, இந்த அணிகள் தற்போது 2 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில் 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கூடிய ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இரு அணிகளும் 2015-ம் ஆண்டு தங்கள் அணியில் இருக்கும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ள அனுமதி வழங்கியது. அதன்படி ரெய்னா, தோனி, ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள மகேந்திரசிங் டோனி கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பெருமை அளிக்கிறது. சென்னை எனது 2-வது தாய் வீடு. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சென்னையில்தான் பதிவு செய்து உள்ளேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமது பலமாக இருக்கிறது. அனைத்து வீரர்களும் திறமை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உள்ளது.

சென்னையை தவிர வேறு ஒரு ஐபிஎல் அணிக்கு விளையாடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. சென்னை ரசிகர்கள் என்னை அவர்களுள் ஒருவராகப் பார்க்கின்றனர்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top