ரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு

இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள்.

இன்னும் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் மீதமிருக்கிறதாம். ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டால் அடுத்த கட்டத்திற்கு காலா நகர இருக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top