ஆர்.எஸ்.எஸ்- விஎச்பி உள்குத்து;கைதாவதை தவிர்க்க தொகாடியா நாடகம்:குஜராத் போலீஸார் குற்றச்சாட்டு

குஜராத் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) க்கும் நடக்கும் உள்அரசியல் சண்டையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் பிரவீன் தொகாடியா கைதுசெய்யப்பட இருந்தார். கைது படலத்திலிருந்து விடுபட பல நாடகங்கள் ஆடி “என்னை என்கௌண்டர் செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டார். இந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் பிரவீன் தொகாடியா கைதாவதை தவிர்ப்பதற்காக நாடகமாடினார் என குஜராத் குற்றப் பிரிவு போலீஸார் குற்றம் சாட்டி உள்ளனர்.

 

 

10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு தொடர்பாக தொகாடியாவை கைது செய்வதற்காக, ராஜஸ்தான் போலீஸார் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த 15-ம் தேதி சென்றனர். இதையடுத்து தலைமறைவானார். பின்னர் அவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், 16-ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜஸ்தான் போலீஸார் என்னை என்கவுன்ட்டரில் கொல்ல திட்டமிட்டிருந்தனர். இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் எனது குரலை ஒடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

 

இதுகுறித்து அகமதாபாத் காவல் (குற்றப் பிரிவு) இணை ஆணையர் ஜே.கே.பட் நேற்று கூறும்போது, “பால்டி என்ற இடத்தில் உள்ள விஎச்பி அலுவலகத்திலிருந்து 15-ம் தேதி காலையில் தனது உதவியாளர் ஒருவருடன் புறப்பட்ட தொகாடியா, தல்டெஜ் பகுதியில் உள்ள கன்ஷ்யாம்பாய் சரண்தாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சுயநினைவுடன்தான் இருந்துள்ளார். அங்கிருந்து தொகாடியாவுடன் காரில் புறப்பட்ட சரண்தாஸ், கோடார்பூர் பகுதிக்கு ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அங்கு காரிலிருந்த தொகாடியாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். தொகாடியா நல்ல நினைவுடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை தவிர்க்க தொகாடியா இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்” என்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top