சுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகளுடன் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று சந்திப்பு

NEW DELHI, INDIA – OCTOBER 24: MEGA Lok Adalat inaugurated by Justice Altamas Kabir, executive chairman of the National Legal Services Authority ( 2 L ), and Delhi High Court Chief Justice Dipak Misra, (L ) the Lok Adalat hold sittings in the premises of the Delhi High Court, giving an additional option to the litigants looking forward to ending their legal woes on October 24, 2010 in New Delhi, India. (Photo by Arvind Yadav/Hindustan Times)

விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் கட்டப்படுவது, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள்.

இதனால் நாட்டின் நீதித்துறையில் உள்ள பாரபட்ச நிலை, சமத்துவம் அற்ற நிலை வெளிச்சத்துக்கு வந்தது. லைமை நீதிபதி மீதான மூத்த நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு இந்தியா நீதி துறையின் மீது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நீதிபதிகள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்சனையை தீர்த்து கொண்டதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து 4 நீதிபதிகளையும் நேற்று தலைமை நீதிபதி சந்தித்து பேச உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் உடல் நல குறைவால் செலமேஸ்வர் நேற்று பணிக்கு வரவில்லை.

இன்று காலை 10.30 மணியளவில் நீதிமன்ற பணிகள் தொடங்குவதற்கு முன்பு 4 நீதிபதிகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பில் வேறு நீதிபதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top