ஆசிரியர் தண்டனையால் உயிரிழந்த மாணவர்; பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

தாமதமாக வந்ததற்கு தண்டனை அளிக்கப்பட்டதால் மாணவர் உயிரிழந்ததால் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரபாவை. இவர்களுக்கு ரேஷ்மா (வயது 18) என்ற மகளும், நரேந்தர்(15) என்ற மகனும் உள்ளனர்.

ரேஷ்மா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு தாமதமாக வந்ததால், உடற்பயிற்சி ஆசிரியர் வாத்து நடை தண்டனை கொடுத்துள்ளார். பின் வகுப்பறைக்கு வந்து அமர்ந்து இருந்த நரேந்தர், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

ஆனால் நரேந்தர், சுயநினைவு இன்றி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் நரேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல் துறையில் நேற்று மாலை புகார் அளித்துள்ளனர். இதுபற்றி திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி பசுபதி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் அந்த தனியார் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் அருள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் மாணவரின் சாவு குறித்து விசாரணை நடத்தினர்.

பள்ளி சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் மணவறைக்கு தண்டனை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவனின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும், உடற்கிளவி ஆசிரியருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திஉள்ளனர். எதை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top