இந்தியாவின் தலைநகர் பெயர் தெரியாத 36 சதவீத கிராமப்புற மாணவர்கள்: ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் மாணவர்களிடம் கல்வி, பொது அறிவு நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய வருடாந்திர கல்வி நிலை தகவல் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

24 மாநிலங்களில் 28 மாவட்டங்களை தேர்வு செய்து 30 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர் அதில், மாணவர்களின் கல்வி திறனும், பொது அறிவு திறனும் மிக மோசமாக இருப்பது தெரிய வந்தது. அதிலும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருப்பதும் தெரிந்தது.

இந்த ஆய்வு இலவச மற்றும் கட்டாய கல்விக்கான சட்டத்தின் விதிமுறைகளில் இருந்து முதன்முதலில் பயனடைந்தவர்கள் குறித்தான அறிக்கையாகும்.

2017 ஆண்டு இந்திய கிராமங்களின் வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER), வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறப்பட்டு இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

57 சதவீத மாணவர்கள் சாதாரண சிறிய கணக்குகள், சிறிய கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள்.

79 சதவீதம் பேருக்கு ஆங்கில வார்த்தைகளை தனது சொந்த மொழியில் மொழி பெயர்க்க தெரிய வில்லை.

36 சதவீத கிராமப்புற மாணவர்களுக்கு நாட்டின் தலைநகரம் பெயர் தெரியவில்லை. இந்திய வரை படத்தை காட்டிய போது, 14 சதவீதம் பேருக்கு இது எந்த நாடு என்று கூட சொல்ல தெரியவில்லை.

21 சதவீதம் பேருக்கு தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர் தெரியவில்லை. இந்திய வரை படத்தில் தங்கள் மாநிலம் எங்கு இருக்கிறது? என்பதை 46 சதவீதம் பேருக்கு சொல்ல தெரிய வில்லை.

ரூபாய் நோட்டுகளை கையில் கொடுத்து அவற்றை எண்ணும்படி சொன்ன போது, 4-ல் ஒருவருக்கு சரியாக எண்ண தெரியவில்லை. 44 சதவீதம் பேருக்கு எடை அளவை சரியாக சொல்ல முடியவில்லை. 40 சதவீதம் பேருக்கு கடிகாரத்தில் நேரம் பார்க்க தெரியவில்லை.

14 வயது நிரம்பியவர்களில் 47 சதவீதம் பேருக்கு ஆங்கிலத்தை வாசிக்க தெரியவில்லை. 18 வயது நிரம்பியவர்களில் 40 சதவீதம் பேருக்கு சரி யாக ஆங்கிலம் வாசிக்க தெரியவில்லை.

60 சதவீத மாணவர்கள் பிளஸ்-2வுக்கு பிறகு படிக்க போவது இல்லை என்று கூறினார்கள். 40 சதவீத மாணவர்கள் எந்த இலக்கும் இல்லாமல் படிப்பதாக தெரிவித்தனர்.

79 சதவீதம் பேர் விவசாய பணிகள் செய்வதாக கூறினார்கள். 14 வயதில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்- பெண் விகிதாச்சாரம் சமநிலையில் உள்ளது.

ஆனால், 18 வயது அடையும் போது, 32 சதவீத பெண்களும், 28 சதவீத ஆண்களும் மேல் படிப்புக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். மேற்கண்ட விவரங்கள் இந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

(ASER) அறிக்கை முதலில் இருந்தே பரிந்துத்துரைத்துவந்தது என்ன வென்றால் மாணவர்களுக்கான அடிப்படை திறன்களை சரியான காலம் மற்றும் நேரத்தில் அளித்து இருக்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட தளர்வு தொண்டு தெரிவித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top