காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அங்கு ராகுல் காந்தி பேசுகையில், “குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். இருப்பினும் குஜராத் மாநில மக்கள் கூட என்ன மாடல் வளர்ச்சி? என கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் விவசாயிகளின் நிலம் மற்றும் தண்ணீரை பறித்துவிட்டனர், அவர்கள் குறைந்த லாபத்துடன் கொடுத்துவிட்டார்கள்.
இந்த முறை குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா பெரும் ஆட்டம் கண்டது. மோடி தலைமையிலான அரசுக்கு ஒரே நம்பிக்கை யாதெனில் ஒரு பிரிவை சேர்ந்த மக்களுக்கு மற்றொரு பிரிவை சேர்ந்த மக்களுடன் சண்டையை தூண்டிவிடுவதில் மட்டும்தான். இதுமட்டும்தான் பிரதமர் மோடியின் உண்மையான பணியாகும்”.
“சீனாவுடன் நாம் போட்டியிடுகிறோம். சீனா 24 மணி நேரத்திற்கு 50,000 வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆனால் இந்தியா 24 மணி நேரத்திற்கு 450 பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது,” என்றார்.
பிரதமர் மோடியும், ஆதித்யநாத்தும் அதிகமாக பேசுகிறார்கள். 2 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதை பற்றி பேசுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடியால் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிந்தது? என கேள்வியை எழுப்பினார்.