அதிமுகவின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம் – டிடிவி தினகரன்

ஆ.ர்.கே. நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோத்தகிரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தன. சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அதிமுகவில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவார்கள் .

புதிய கட்சி உட்பட பல விஷயங்கள் பரிசீலனையில் உள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பு படி அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை தற்காலிகமாகவே பயன்படுத்துகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். அதிமுக அம்மா பெயரை பயன்படுத்த அனுமதிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளோம். ஒரு வேளை நான் வேறு கட்சியை ஆரம்பித்தால் அதன் நோக்கம் அதிமுகவை மீட்டெடுப்பதாகவே அமையும்.

அதிமுகவின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top