டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த தமிழ் மாணவர் மர்ம மரணம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்ம மரணம்.

இவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் சரத் பிரபு இன்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சரத் பிரபு உடலை மீட்டனர்.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர் சரத்பிரபு இறந்தது குறித்து திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் அவரின் குடும்பமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

இதற்கு முன்பே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்தார். பின்னர் அவர் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, சரவணன் மரணமடைந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து காரணம் இன்னும் தெரியாத நிலையில் மேலும் ஒரு மாணவர் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்த, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து தமிழ் மாணவர்கள் மறுமண முறையில் இறந்து வருகின்றனர். இது குறித்து மத்திய – மாநில அரசுகள் சரியான தீர்வுகளை முன்னெடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top