இந்திய ராணுவ தளபதியின் கருத்து, அமைதியை பராமரிக்க உதவாது: சீனா கண்டனம்

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அண்மையில் இந்தியாவின் எல்லை பிரச்னைகள் குறித்து பேசும்போது, மேற்கு எல்லையில் பாகிஸ்தான் மீதும், வடக்கு எல்லையில் சீனா மீதும் நமது ராணுவத்துக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சீனாவுடன் நமக்கு டோக்லாம் பகுதியில் பிரச்சினை உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங்க் நேற்று கண்டனம் தெரிவித்து கூறியதாவது,

“இந்திய தளபதியின் கருத்து, கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி இடையே எல்லையில் அமைதியை பேணுவதற்கு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைக்கு எதிரானது. டோக்லாம் பிரச்சினை குறித்து அவர் கூறியிருப்பது, ஆக்கப்பூர்வமானது அல்ல. இது எல்லையில் அமைதியை பராமரிக்க எவ்விதத்திலும் உதவாது. டோக்லாம் என்றைக்குமே சீனாவுக்கு உரிய பகுதிதான்” என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top