‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து

இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து பணிபுரியும் இரண்டாவது படம் இது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்திருக்கிறது.

பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது.

மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிய படமாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அகாடமி விருது வென்றவர்களான கெவின் ஹேனி மற்றும் அலெக்ஸ் நோபல் ஆகியோரால் செய்யப்பட்ட சிறப்பு மேக் அப் சோதனை இது. நடிகர்களுக்குக்கான இந்த மேக்கப் டெஸ்ட் சுமார் நான்கு மணி நேரம் எடுக்கும் என்று கூறுகின்றனர்.

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாலாஜி தரணீதரனின் இரண்டாவது படமான ‘ஒரு பக்க கதை’ தணிக்கைக்கான வேலைகள் முடிந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. இப்படக்த்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top