டிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து, குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த 11-ந் தேதி நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப்,

“அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த மக்களை நாம் ஏன் இங்கே வைத்திருக்க வேண்டும்? அவர்களுக்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருகிற குடியேறிகளை நாம் வைத்துக்கொள்ளலாமே? மேலும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களால் நமது நாட்டுக்கு எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை, நமக்கு இன்னும் கூடுதலான ஹைதி நாட்டினர் எதற்காக வேண்டும்? அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்று கூறினார்.

இந்த இனவெறி பேச்சுக்கு ஆப்பி ரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்பிரிக்க நாடுகள் மீது டிரம்ப் தனது இனவெறியை காட்டியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு டிரம்ப் மறுத்து விட்டார். தான் உள் நோக்கத்துடன் பேசவில்லை என தெரிவித்து இருந்தார்.

சர்ச்சைக்கு உரிய இந்த இனவெறி பேச்சை பேசியதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது, ஆளும் குடியரசு கட்சிஎம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்தனர். பாராளுமன்ற சபாநாயகர் பால் ரியான் கூறும் போது அதிபர் டிரம்பின் வெளிநாட்டினர் குறித்த குடியேற்ற கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. உதவிகரமற்றது. எதற்கும் பயன்படாது என கருத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ‘மேற்கு பால்ம் பீச்‘ பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்பில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது நான் இன வெறியன் அல்ல. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் ஒரு போதும் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top