நடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர்கள் ஆனந்த விகடான் சினிமா விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக தட்டிச்சென்றனர்.

விருது பெற்றவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கைதட்டல் பெற்றனர் என்றாலும், ஒரு விருந்தினர் விருது அளிப்பவராக இருந்து இவர்கள் அனைவரும் பெற்ற கைதட்டலை விட அதிகம் பெற்றார். இவர்க்கு அறிமுகம் தேவை இல்லை என்பதில் சந்தேகமே இல்லை, ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கவுசல்யா சங்கர் மேடையில் நடந்தபோது, ​​மிக பெரும் கைதட்டலை பெற்றார்.

பாகுபலியின் தொடரில் அவரது பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் சத்யராஜ், தான் இந்த பரிசை ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கவுசல்யா சங்கர் இடம் இருந்து பெற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதன் பின் இந்த விருதை ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கவுசல்யா சங்கரிடம் இருந்து சத்யராஜ் பெற்று கொண்டார் இந்த நிகழ்வின் பொது மிகப்பெரிய கைதட்டல்கள் எழுந்தது.

இது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில்

அந்த விருதை நான் பெற்றிருந்ததாக அமைப்பாளர்கள் எனக்குத் தெரிவித்தபோது, ​​சில மூத்த நடிகர்களின் பெயர்களை என்னிடம் கூறி இவர்களில் யார் இடம் இருந்து நீங்கள் விருதை பெற்று கொள்கிறீர்கள் என்று கேட்டனர். ஆயினும், தனிப்பட்ட துயரத்தை மீறி சமூக மாற்றத்திற்காக உழைக்கும் கௌரவமிக்க காரணத்திற்காக போராடுகின்ற கௌசல்யாவிடம் இருந்து நான் விருதைப் பெற்று கொள்கிறேன் என்று வலியுறுத்தினேன். நடிகர்களாக, நாங்கள் சினிமாவில் சமுதாய பிரச்சினைகளுக்கு போராடுகிறோம். ஆனால் இவரை போன்றவர்கள் நிஜவாழ்க்கையில் களத்தில் நின்று போராடும் மக்கள் “என்று சத்யராஜ் கூறினார்.

திருப்பூர் நீதிமன்றம் சமீபத்தில் கௌசல்யாவின் கணவரை கொலை செய்த கூட்டத்திற்காக கௌசல்யாவின் தந்தை மற்றும் 10 பேருக்கு மரண தண்டனை விதித்தது. கவுசல்யா மற்றும் சங்கர் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சங்கர் தலித் என்பதால், மார்ச் 2016 ல் உடுமலைபேட்டையில் சாதி வெறி காரணமாக ஆணவக்கொலை நடைபெற்றது. அவரது தந்தை சின்னஸ்வாமி தலைமை நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் ஆகியோரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கௌசல்யா, நான் இங்கு கலந்துகொண்டதில் பெருமைபடுகிறேன், நான் தொடர்ந்து சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடுவேன் என்று கூறினார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, தன் சொந்த தாய் உட்பட மூன்று குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண் என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் சத்யராஜுக்கு இந்த விருதை வழங்க மேடையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனும் உடன் இருந்தார்.

மனிதனே மனித மலத்தை அள்ளும் அநீதிக்கு எதிராகவும், சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும் இந்தமாதிரியான சமூக பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நடிகர் சத்யராஜ், ஆனந்த விகடனிலிருந்து அவர் பெரும் நான்காவது விருது இதுவாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top