மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு மழை

இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.

அதன்படி பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துவங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1080 காளைகள், 1188 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டி 8 சுற்றுகளாக நடைபெற உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 100 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அப்போது பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதேபோல் வீரர்களின் கையில் சிக்காமல் சென்ற காளை உரிமையாளர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள், தங்க, வெள்ளி நாணயம், பட்டு வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வரும் காளைகளை, மாடு பிடி வீரர்கள் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காளைகளை அடக்க மதுரை வந்துள்ளார்.

காயமடைந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனடி முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 21 மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் ஆம்புலன்சு வசதிகளுகம் செய்யப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக 1,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் சுற்ரில் 77 காளைகள் இறக்கபட்டன.5 பேர் காயம் அடைந்தனர்.விதிகளை மீறியதாக 2 மாடுபிடி வீரர்கள் வெளியேற்றபட்டனர்..

பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகளவிலான காளைகள் பங்கேற்க உள்ளதால், போட்டியின் நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top