தென் அமெரிக்க கடலோர பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

தென் அமெரிக்க நாட்டில், பூகுவோ நகரத்தின் தென்மேற்கில் 124 கிலோமீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவு கோளில் 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ‘தீங்கு விளைவிக்கும் சுனாமி அலைகள் சில கடலோரங்களில் காணக்கூடும் என்று முன்னறிவிப்பு அறிவித்துள்ளது.

இந்த சுனாமி அலைகள் பெருமளவு பகுதிகளுக்கு 1 முதல் 3 அடி உயரத்திற்கு காணப்படும் என்றும், மேலும் அந்த அலைகள் சிலியின் கரையோரங்களுக்கு 1 அடிக்கு குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளன.

பூகம்பம் ஏற்பட்ட மையத்தில் இருந்து 300km சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டு உள்ளது, ஆனால் அது அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top