சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு; இந்திய பார் கவுன்சில் சமரச முயற்சி

நாட்டின் முக்கியமான நான்கு தூண்களில் ஒன்றான நீதி துரையின் மீதும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் நான்குநேற்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் நேற்று திடீரென்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருப்பதும், நீதிபதிகள் இடையே முதன் முதலாக மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜே.செல்லமேஸ்வரின் இல்லத்தில் ஏராளமான நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் திரண்டனர். அங்கு மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட உரிமை என்றபோதிலும், இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். வழக்குகளை ஒதுக்கும் உரிமை இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்ல என்றும், மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்கள் அல்ல என்றும் கடிதத்தில் அவரகள் தெரிவித்து இருந்தனர். மேலும், நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது என்பதையும் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியின் மீதான இந்த குற்றச்சாட்டு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. மேலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மக்களை காக்கும் மிகப்பெரிய செயலில் உள்ள நீதித்துறையின் மீது நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள உள்ள நம்பகத்தன்மையில் விரிசல் மற்றும் அட்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கியுள்ளது. அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்த 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று இரவு 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடையே வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை சந்தித்துப் பேசுவதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்து உள்ளோம். இந்த பிரச்சினை கூடிய விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அரசியல் கட்சி தலைவர்களை இந்திய பார் கவுன்சில் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையின் கண்ணியத்தை குலைத்து விடக்கூடாது. நீதித்துறையின் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து உள்ளனர்” என்று கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கமும் நேற்று கூடி இந்த பிரச்சினை குறித்து விவாதித்தது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றினர். அவற்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதில் ஒரு தீர்மானம், இந்த பிரச்சினையில் முழு அமர்வில் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இன்னொரு தீர்மானம் இந்த அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கிற வகையில் பொது நல வழக்குகள், கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளை தாண்டி சென்று விடாத படிக்கு பார்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top