மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப்பாய்ந்தன காளைகள்

இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அவனியாபுரம், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தில் 675 வீரர்களும், 954 காளைகளும் பங்கேற்க உள்ளன. போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு இறுதிகட்ட மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.

இதே போல் காளைகளுக்கும் இறுதிக்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் அவை அனைத்தும், வாடிவாசல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செல்லூர்ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.

மத்திய அரசு கடந்த ஆண்டு தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடைசெய்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த தமிழ்நாடு முழுவதும் போராட்டம் துவங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது. சுமார் 50 லட்சம் மக்களை இந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டடத்தின் மீதான தடையை நீக்கிக்கொண்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

போட்டியை முன்னிட்டு, அவனியாபுரம் பகுதியில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 20 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டையொட்டி அவனியாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top