“பத்மாவத்” படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தும் 4 மாநிலங்களில் தடை

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற இந்துத்வா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன.

ராஜபுத்ர வம்சத்தினரும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தன.

இதனால் ரூ.190 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 1-ந்தேதி வெளியாவதாக இருந்தது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து படத்தின் பெயர் ‘பத்மாவத்’ என்று மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டதும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. வருகிற 25-ந்தேதி பத்மாவத் படம் திரைக்கு வருகிறது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறாக தடைகள் அனைத்தும் நீங்கி படத்தை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் ரிலீசாகும் என்றும், இந்திய தவிர்த்து 60 நாடுகளில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தணிக்கை குழு அனுமதி அளித்தும், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் படத்திற்கு போலீஸ் தரப்பில் தடை கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

பீகாரிலும் படத்தை தடை செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பத்மாவத் படத்தில் மாற்றங்கள் செய்து இருப்பதன் மூலம் உத்தர பிரதேசத்தில் படத்துக்கு எந்த தடையும் இல்லை என்று மாநில அரசு தற்போது தெரிவித்துள்ளது.

மும்பையில் நேற்று பத்மாவத் படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்ததை கண்டித்து கர்னி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top