பொங்கல் பரிசு அளிக்கும் ‘நாச்சியார்’ படக்குழு

ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிப்பில் பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அவரும் ஜோதிகா, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.

இயக்குனர் பாலா படம் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சைக்குள்ளாகவாது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துடன், சர்ச்சையிலும் சிக்கியது.

டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தையால் டீசர் வைரலானது. இந்நிலையில், ‘நாச்சியார்’ படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top