இன்று தென்ஆப்பிரிக்கா இந்தியா மோதும் 2-வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

வேகப்பந்துவீச்சின் சிம்மமாக திகழ்ந்த கேப்டவுனில் இந்திய அணி 208 ரன்கள் என்ற எளிய இலக்கை அடையமுடியும் 135 ரன்களில் சுருண்டது.

வேகப்பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக தென் ஆப்பிரிக்கா இருந்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் 6 விக்கெட்டுகளை சாய்த்து, இந்திய அணியை முழுமையாக நிலைகுலைய வைத்தார்.

ஆடுகளம் மற்றும் அதன் தன்மை வேகப்பந்து எந்த அளவுக்கு திரும்புகிறது என்பதை இந்திய பேட்ஸ்மேன்களால் துல்லியமாக கணித்து செயல்பட முடியாததால் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை குவித்த இந்தியா அணிக்கு இது பெரும் அடியாய் அமைந்தது.

2-வது டெஸ்ட் நடக்கும் செஞ்சூரியன் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த அடுக்கலமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி அந்த பெருமையை நீட்டிக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

இதே போல் தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்டில் தோற்ற வெளிநாட்டு அணி அதன் பிறகு தொடரை கைப்பற்றிய வரலாறு ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1922-23-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி அங்கு தொடக்க டெஸ்டில் தோற்று அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அந்த சரித்திர பட்டியலில் இந்திய அணி இடம் பிடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் வீரர்களின் பந்துவீச்சு மற்றும் ஆடுகளத்தில் தன்மை குறித்தான பார்வைகள் இருந்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்த முடியும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல் அல்லது தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா அல்லது பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர்குமார் அல்லது இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம், டீன் எல்கர், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ் அல்லது நிகிடி.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top