தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:

ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்க வேண்டியதில்லை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இது உள்ளாட்சி தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணையை 28.2.2018-க்குள் அறிக்கையை வழங்கும் அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். தமிழகத்தில் 1,599 பள்ளிகள் பல்வேறு விதங்களில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் விகித அளவு கட்டுக்குள்தான் உள்ளது, திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன சேமிப்பறை கட்டப்படும். புயலின்போது காணாமல் போன மீனவர்களில் கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top