ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் கூறியதாவது:-

ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

இப்போது 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.

ஆனால் இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து வருகிறது இதற்கு காரணம் உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தத்தில் இந்தியா அரசு தெரிந்தே கையெழுத்துத்திட்டத்தை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியா சார்பாக உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அரசின் இந்த செயலை கண்டித்து மே 17 இயக்கம் போராட்டங்களை நடத்தியது.

இந்தியா போன்ற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடதடக்குது.

தற்போது உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு மானியத்தை ரத்து செய்வது எதிர்காலத்தில் ரேஷன் கடைகளை மூடுவதற்கான செயலாகவே தோன்றுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top