ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

‘ஜாய் ஆலுக்காஸ்’ கேரளாவில் தலைமை அலுவலகம் கொண்டு பல மாநிலங்களில் கிளை நிறுவனங்களை அமைத்து இயங்கி வருகிறது.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு காஞ்சீபுரம், கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, நெல்லை, நாகர்கோவில், விழுப்பும், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ஏராளமான கிளைகள் உள்ளன.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘ஜாய் ஆலுக்காஸ்’ நகைக்கடை உள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளிலும், ஒரே நேரத்தில் 30 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

2 நாட்களாக நடந்த இந்த சோதனையில் உரிமையாளர் வீடு மற்றும் ஊழியர்களின் வீடுகளில் பல ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களை பார்த்த போது ரூ. 700 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பழைய தங்க நகைகளின் மதிப்பை குறைத்து காட்டி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் அதிகாரிகளின் கையில் கிடைத்துள்ளன.

இன்றும் 3-வது நாளாக தொடர்ந்து ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை முடிவில் மேலும் பல ஆவணங்கள் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top