உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது – நீதிபதிகள் பேட்டி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.

சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.  உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்

நாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

நாட்டின் நான்கு தூண்களில் முக்கியமானதாக கருதப்படும் நீதி துரையின் மீது நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top