பொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்

அருண் விஜய் சில வருடங்களுக்கு முன்பு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவந்தார். பின் கவுதம் இயக்கத்தில் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டினார்.

இதன்பின், அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் தற்போது `தடம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இந்த படத்தின் டீசரை பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

“வித்தியாசமான கதை களத்தில் ‘`தடம்’’ பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் `தடம்’ படமும் அருண் விஜய்க்கு பெரும் வெற்றியையும் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top