வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்’

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சரவணன் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.

இதே போல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நெல்லையைச் சேர்ந்த மருத்துவ மேல்படிப்பு மாணவர் மரியராஜ் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலையில் வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். நீட் தேர்வு காரணமாக வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலை உள்ளது.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில்,

குஜராத்தில் படித்த தமிழக மாணவர் மரியராஜ் தற்கொலை முயற்சி பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அம்மாநில அரசுடன் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மாணவர் மரியராஜ் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்துக்கு, இன ரீதியாக துன்புறுத்தல் நடந்ததாக புகார் தெரிவித்ததுடன் அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top