இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் கொள்கைகளை சீர்திருத்தங்கள் – எட்வர்ட் ஸ்னோடென்

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அணைத்து நல திட்டங்களையும் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆதார் பெரிய அளவில் பாதுகாப்பானது இல்லை என்பது பஞ்சாப்பை சேர்ந்த ரச்னா கயிரா என்ற பத்திரிக்கையாளர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி பேடிஎம் மூலம் ரூ.500 செலுத்திய உடனே செய்தியாளருக்கு ஒரு ஆதார் தகவல்கள் குறித்த இணையதளம் மற்றும் அதன் கடவுச் சொல் வந்துள்ளது.அந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி என அனைத்து தகவல்களும் இருந்துள்ளது. இதையடுத்து அந்த செய்தியாளர் சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள (உதாய்) ஆணையத்திடம் புகார் அளித்தார்.

ஆனால் இந்த புகாரை ஆதார் சேவை வழங்கி வரும் உதாய் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அந்த மோசடியை கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை மீது பஞ்சாப் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் உலகின் பெரிய நாடுகளின் பெரும் நிறுவனங்கள் மற்றும் அரசுகள் மக்களை கண்காணிக்கும் மோசடிகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென், ஆதார் அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தனது குடிமக்களை கண்காணிக்க அமெரிக்கா அரசு ஒரு இரகசிய அரசாங்க திட்டத்தை அம்பலப்படுத்திய பின்னர் ஸ்னோவ்டென் அமெரிக்காவை விட்டு 2013ஆம் ஆண்டு வெளியேறினார். அவர் தற்போது புகலிடம் அளித்த ரஷ்யாவில் வசிக்கிறார்.

இதுகுறித்து எட்வர்ட் ஸ்னோடென் பதிவு செய்துள்ள டுவிட்டில், ”ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவருக்கு விருது கொடுக்க வேண்டும். அரசு உண்மையிலேயே நீதியின் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் ஒரு பில்லியன் இந்தியர்களின் பாதுகாக்கப்பட வேண்டிய தனியுரிமையை அழிக்கும் ஆதார் கொள்கைகளை சீர்திருத்துவார்கள். இதற்கு காரணமான நபர்களை கைது செய்ய விரும்புகிறீர்களா? இல்லை அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு காரணமான நபர்கள் வேறு யாரும் இல்லை. ஆதார் அமைப்பின் அதிகாரிகள்தான்” என்று வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது, பல நிர்பந்தங்களுக்கு இடையில் அந்த நிருபர் மீது காவல் துறையால் போடப்பட்ட (FIR) முதல் தகவல் அறிக்கை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே அவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top