இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக இருந்து வரும் கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார்.

அறிவியல் சேவைக்காக 2014-ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உட்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன் இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top