8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக்

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொழிலாளர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதன் பின் தற்போது அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு அரசு, பேருந்துகளை இயக்கிவருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் பேருந்துகளில் பயணம் செய்ய அஞ்சுகிறார்கள்.

ஸ்டிரைக் தொடர்பான வழக்கினை விசாரித்த ஐகோர்ட், தொழிலாளர்களை உடனடியாக பணிக்குதிரும்பும்படி உத்தரவிட்டது. நிலுவைத் தொகை ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்து, போராட்டத்தைக் கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவது ஏற்புடையதில்லை என்பதாலும், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி விட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதல்வரின் அறியாமையை காட்டுகிறது. என்பதால் வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தமிழ் பண்டிகையான பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்திய நிலையில், 8-வது நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.

ஸ்டிரைக் ஆரம்பித்த நாளில் இருந்த நிலை மாறி தற்போது அதிக அளவிலான பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன.ஆனால் தமிழகம் முழுவதும் கணிசமான அளவிலே இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குவதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறி உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top