அல் ஜசீரா செய்தி அலுவலகத்தை துப்பாக்கி முனையில் மூடிய ஏமன் ராணுவம்

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பு நிறுவனம் அமைந்துள்ளது. அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு, ஆசிய கண்டம் மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.

உலகின் பல பகுதிகளில் அல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு போர் உச்சத்தை தோட்டத்து இன்றளவும் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

யுத்தம் நடைபெறும் நாடுகள் முழுவதும் செய்தி ஊடகத் தொழிலாளர்கள் அறிக்கை செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த மாதம் ஹுதி போராளிகள் ஏமன் அல் யூம் தொலைக்காட்சி சேனலைத் தாக்கி 12 ஊடக ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர்.

ஏமன் அரசு படைகளுக்கும் ஹுதி போராளிகளுக்கும் இடையே ஏமனில் நடைபெற்று வரும் போரில் டையிஸ் எனும் பகுதி மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இது ஏமனின் தலைநகர் சானா மற்றும் தெற்கிற்கு இடையே நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த பகுதி ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top