சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்

அன்னிய முதலீட்டு கொள்கையை இன்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (புதிதாக திறக்கப்பட்ட நிறுவனங்கள்) எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒற்றை பிராண்ட் (வணிக முத்திரை) சில்லரை வர்த்தகத்தில் அரசின் அனுமதிக்கு காத்திருக்காமல் 100 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இனி முதலீடு செய்யலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசின் அனுமதியுடன், 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானச்சேவை நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்யவும் சில வழித்தடங்களில் விமானச்சேவைகளை நடத்தவும் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது உள்ளூர் சில்லறை வர்த்தகம் மற்றும் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டும் இன்றி உள்ளூர் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top