போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு

 

 

போக்குவரத்து தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும் என்று நியாயமான  கோரிக்கைகளை முன்னிறுத்தி 6-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு பிடிவாதமாக ஊதியத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என ஒரு மசோதாவை தாக்கல் பண்ணியிருக்கிறது

 

எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

 

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.

 

இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

 

இந்த மசோதா நிறைவேறினால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பளம் ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும். அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும்.

 

சட்டப்பேரவையில் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்பு தெரிவித்தனர்.அதேவேளையில், எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை ஊயர்த்தாத தமிழக அரசு எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு இரு மடங்கு உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு இந்த அரசு மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top