ராஜீவ் கொலை வழக்கு; ரவிச்சந்திரன் பரோல் மனு; சிறைத்துறை ஏடிஜிபி பதிலளிக்க அவகாசம்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ரவிச்சந்திரன்.

 

அவரது குடும்ப சொத்து குடும்பச் சொத்து பாகப்பிரிவினைக்காக ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக் கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி 17.3.2017-ல் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்தனர். இதனால் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி சிறைத் துறை ஏடிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முறையாக விசாரிக்கப்படாமலும் முக்கியமான குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமலும்.தண்டனை கொடுத்த நீதிபதியே தாங்கள் கொடுத்த தண்டனை தவறு அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் விசாரித்த சிபிஐ அதிகாரியே தவறாக பதிவு செய்ததாகவும் நாளுக்கு நாள் அதன் உண்மை தன்மை வெளியே வந்துகொண்டிருக்கிறது.முக்கியகுற்றவாளியான  சந்திராசாமி விசாரிக்கப்படாமல் இறந்தும் போய்விட்டார் இந்த நிலையில் 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு சட்டரீதியாக கிடைக்கக்கூடிய சலுகைகளே கிடைக்காத நிலையில் பரோலில் விடுதலை செய்யக்கூட நீதி துறையும் அரசும் தாமதிப்பது மனித நீதி அற்ற தன்மையே

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top