வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டு பரிசோதனை செய்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் அமெரிக்காவை கொரியா தீபகற்பத்தில் இருந்து வெளியேறுமாறு எதிர்த்து வந்தது. வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னைடாவை கொடுத்தது இது அமெரிக்காவிற்கு எரிச்சலை உண்டாக்கியது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று தென் கொரியாவை எச்சரித்து வந்தது வடகொரியா. அமெரிக்காவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது வடகொரியா.

இதன் காரணமாக அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் மேரிலாந்து மாகாணத்தின் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் உள்ள ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், “ நீங்கள் இப்போது கிம் ஜாங் அன்னிடம் தொலைபேசியில் நேரடியாக பேசுவீர்களா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ நிச்சயமாக பேசத்தயார். பேச்சு வார்த்தையில் எப்போதுமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தற்போது அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பேச்சு நடந்த முன்வந்துள்ளனர். இது மிகப்பெரிய தொடக்கம். நமக்கு இதில் தொடர்பு இல்லை என்று சொன்னால், அவர்கள் இப்போது குளிர்கால ஒலிம்பிக் பற்றி பேச மாட்டார்கள். நான் குழப்பத்தில் இல்லை என்பதை அவர் அறிவார்” என பதில் அளித்தார்.

மேலும், “வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் கலந்து பேசி நல்லதொரு அமைதித் தீர்வினை காண வேண்டும். இன்னும் பலருடன் கலந்து பேச வேண்டும். இதில் நல்லது நடந்தால் அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கே மிகப்பெரிய செயலாக அமையும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top