இந்தியாவில் 2017-18 நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2017-18) தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவிகிதமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும்.

2016-17 நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போது தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆகும்.

மத்திய அரசின் புள்ளிவிவர அலுவலகத்தின் முதல் தேசிய வருவாய் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கை இந்த தகவலை கூறுகிறது. 2017-18 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சிவிகிதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக 6.5 சதவிகிதமாக இருக்கும்.

இந்த சரிவுக்கு காரணம், விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளின் மோசமான செயல்பாடுகள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவின் விவசாய துறையில் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் காணப்படவில்லை, இந்திய முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதல், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அணைத்து தொழிலகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது காரணம் விவசாயத்திற்கான மானியங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சுய உற்பத்தி திறனை வளர்த்தெடுக்க மத்திய அரசு எந்த செயல்களிலும் முயற்சிக்கவில்லை காரணம் மத்திய அரசு ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை உயர்த்தியுள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவங்களுக்கு இங்கு திறந்த பொருளாதாரத்தை இந்தியா அரசு மேற்கொள்வதால் இந்தியாவின் உற்பத்தி துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top