கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை

 

 

இந்த நூற்றாண்டில் ஒரு சமூகத்தின் பண்பாட்டை–கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த சமூகத்தின் திரைப்படங்களை பார்த்தாலேபோதும்.அந்த சமூகத்தின்  பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும்.அந்த வகையில்  திரைப்படங்கள் ஒரு சமூக அமைப்பாக தங்களது பங்களிப்பை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தேசிய இனங்களின் திரைப்படங்களை பார்ப்பதின்  மூலம் நாம் நம்மை சீர்தூக்கி பார்க்கவும் நம்மை சரி செய்துகொள்ளவும் பண்பாட்டை தெரிந்துகொள்ளவும் அவைகளின் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ளவும்  முடியும்.

 

அந்த வகையில் கேரளா,  திரைப்படங்கள் மூலம் தங்களது பண்பாட்டை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகிறது.

 

இந்த வருடம்  கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர்  8 ந்தேதி முதல்   15ந்தேதி வரை நடந்தது. இந்த சர்வதேச திரைப்பட விழாவை கேரளாவின் சலசித்திரா அகாடமி முன்நின்று நடத்தியது. இந்த திரைப்பட விழாவின் முக்கியத்துவம் என்ன வென்றால். ஒவ்வொறு வருடமும் competition section -போட்டிப்படப் பிரிவு ஒன்று உண்டு. இதில்,  ஆசிய ,ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்த புது திரைப்படங்கள்  மட்டும்தான் கலந்துக்கொள்ள முடியும். இதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு சிறந்த அம்சமான திரைப்படத்திற்காக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 லட்சம் (சுமார் 30,000 அமெரிக்க டாலர்) ரொக்கப் பரிசு கொண்ட கோல்டன் க்ரோ விருது.வழங்கப்படும்.

 

இந்த போட்டி பிரிவில் பதினான்கு படங்கள் கலந்துகொண்டன [.இந்த பதினான்கு படத்தில் நான்கு படங்கள் இந்த வருட ஆஸ்கார் திரைப்படப் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்]  பதினான்கு படத்தில்

 

சிறந்த திரைப்படத்திற்காக விருது அன்னேமரி ஜாகீர் இயக்கிய பாலஸ்தீனிய படமான ‘வாஜிப்’  என்ற திரைப்படத்திற்கு கிடைத்தது.

சிறந்த இயக்குனருக்கான விருது   தாய்லாந்து  நாட்டை சேர்ந்த அனிச்சா பூன்யவதனா  [Anucha Boonyawatana] இயக்கிய  மலிலா  [‘Malila / The Farewell Flower’]. ‘க்கு கிடைத்தது.

சிறந்த  படத்திற்கான  ஆடியன்ஸ் விருது   ரெய்கானா  [Rayhana]  இயக்கிய {France|Algeria|Greece/Arabic|French பிரன்ச்/அரபிக் /அல்ஜீரியா]  மொழியான ‘I Still Hide to Smoke- என்கிற படத்திற்கு கிடைத்தது.

65    நாடுகளிலிருந்து 190 திரைப்படங்கள் எட்டு நாட்கள் திரையிடப்பட்டன.தினசரி கலாச்சார நிகழ்வுகள் ,செமினார் ,இயக்குனர்களுடன் நேர்காணல், கேரளாவின் தலைசிறந்த இயக்குனர் அரவிந்தன் நினைவு சொற்பொழிவு என திரைப்பட விழா கொண்டாடப்பட்டது.

 

திரைப்படவிழா  துவக்க நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு ‘ஒக்கி புயல்’ மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கியதால்அந்த துயரத்திலிருந்து கேரள மக்கள் விடுபடவில்லை. ஆகையால், முதல் நாள் துவக்கவிழாவில் கொண்டாட்ட நிகழ்வு ரத்துசெய்யப்பட்டு இறந்துபோன மீனவர்களுக்கு இரண்டு நிமிடம் மெழுகுவர்த்தி ஏந்தி துக்கம் நினைவு கூறப்பட்டது.பின்பு ஓபனிங்  திரைப்படம் The Insult  திரையிடப்பட்டது.

 

ரஷ்ய இயக்குனர் அலெக்ஸ்சாண்டர் சுக்குரோ விற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் பிரகாஸ்ராஜ்  அழைக்கப்பட்டிருந்தார்.  உலகத்திரைப்படங்கள் ,தற்போதைய மலையாள சினிமா, தற்போதைய இந்திய சினிமா, குறிப்பிட்ட ஒரு நாட்டு சினிமாவில் பிரேசில் நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த வருடம்  புதிதாக  UPROOTED: FILMS ON IDENTITY & SPACE  என்ற தலைப்பில் படங்கள் சேர்க்கப்பட்டிருந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.    இன்று உலகெங்கும் எதிகொள்ளும் பெரிய பிரச்சனை மக்கள் இடப்பெயர்வு, அகதி வாழ்கை , போர், பஞ்சம் மற்றும் இனப்படுகொலை. இவற்றின்  காரணமாகவே சுமார்  ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும் உறவுகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த சிக்கலை பிரதிபலிக்கும் படங்களாக ஆறு திரைப்படங்கள் UPROOTED: FILMS ON IDENTITY & SPACE என்ற வகையில் திரையிடப்பட்டன.  சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய இயக்குநர்கள் இயக்கிய இந்தத் திரைப்படங்கள் . பொதுவான மற்றும் வெளிப்படையான நெருக்கடியின் கருப்பொருளை கையாண்டு பொதுவான சிக்கலின் பல்வேறு அம்சங்களை சிறப்பித்துக் காட்டுகின்றனவையாக அமைந்தது மிகச்சிறப்பாக இருந்தது.

 

இனி சிறந்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பேசுவோம்…   

  சேவற்கொடியோன்  

 

 

திரைப்பட விழா வீடியோ ;

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top