தென்கொரியாவின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு வடகொரியா தயார்

தென்கொரியாவின் பேச்சு வார்த்தை அழைப்பை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று தென் கொரியாவை எச்சரித்து வந்தது வடகொரியா.

 

அமெரிக்கா-தென்கொரியா இடையே வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறவுள்ள இந்த சமயத்தில் தென்கொரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பைக் டே ஹுன் கூறும்போது, இந்தப் பேச்சு வார்த்தையில் குளிர்கால ஒலிம்பிக், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் இதர பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

தென் கொரியாவின் இந்தப் பேச்சுப் வார்த்தை அழைப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.

 

வடகொரியா – தென்கொரியா இடையேயான சந்திப்பு அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை நிகழும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வடகொரியாவின் இந்த திடீர் மாற்றம் அமெரிக்கா – தென்கொரியா இடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான நகர்வு என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top